/உள்ளூர் செய்திகள்/கரூர்/தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்?தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்?
தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்?
தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்?
தண்டவாளத்தில் வாலிபர் உடல் இறப்பில் மர்மம்?
ADDED : ஜூன் 01, 2010 02:10 AM
குளித்தலை: குளித்தலை ரயில் தண்டவாளத்தில் பெயிண்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
குளித்தலை சின்னஆண்டார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கராஜ் மகன் தர்மராஜ் (26). பெயிண்டராக பணி புரிந்தார். கடந்த 30ம் தேதி இரவு தலை முடி வெட்ட சலூனுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை ஆறு மணியளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரயில் தண்டவாளத்தில் இரண்டு கைகளும் முன்புறம் இணைத்துக்கொண்ட நிலையில், பின்தலையில் ரத்தக்காயத்துடன் மர்மமான நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சுப்பையா, எஸ்.ஐ., தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இறந்த தர்மராஜ் குறித்து உறவினர்களிடம் குளித்தலை டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.